இணையம்.நெட் உலக வலையில் ஒரு புதிய தளம். விரல் முனையில் ஒரு விபரம் காட்டி.
நாட்டில் நகரில் நடக்கும் பெரும்பாலான நிகழ்வுகளின் கால நேர இடங்கள் பற்றிய தரவுகளை ஒன்றிணைத்து ஒரே களத்தில் கொடுக்கும் தளம்.
பல நிகழ்வுகள் ஒரே நாளில் அதுவும் ஏக காலத்தில் நடைபெறுவதாற் பாதிக்கப்பட்ட பலருக்கு உதவுவதே இத் தளத்தின் நோக்கம்.
எல்லாமே முக்கிய நிகழ்வுகள். அவசியம் கலந்துகொள்ள வேண்டிய நிகழ்வுகள் ஆனால் ஒரே நாளில் ஒரே நேரத்தில் நடைபெறுகிறதே என்ன செய்யலாம்? எது முக்கிய நிகழ்வு? எவர் முகத்துக்காக எந்நிகழ்வுக்குப் போக வேண்டும்.? மிக அருமையாய்க் கிடைக்கும் வார இறுதி நாட்களில் பெருகிக் கிடக்கும் விழாக்கள், ஒரே நேரத்தில் அழைப்பை மறுக்காமல் முகம் காட்ட வேண்டிய மூன்று நிகழ்வுகள் ஓய்வாய் இருக்க வேண்டிய நாட்களில் குடும்பத்தோடு தெருத்தெருவான அலைச்சல். முடிவில் மிஞ்சும் எரிச்சல். இதற்கு என்ன செய்யலாம் ?
தவறு யார்மீதுமல்ல. நிகழ்வுகளை ஒழுங்கு செய்பவர்களுக்கு ஏனைய நிகழ்வுகள் பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை . நிகழ்வுகளை ஒருங்கிணைத்து ஒரே பார்வையில் தரும் வசதிகளுமில்லை.
இனி அந்தக் கவலை இல்லை. இந்தத் தளத்தில் அவையெல்லாம் கிடைக்கும்.
நிகழ்வுகளை நடத்த இருப்பவர்கள் அறியத்தரும் நேர, கால, இடம் பற்றிய விபரங்களை இந்த இணையத்தில் பார்த்து உங்கள் நிகழ்வுகளுக்குக் கால நிர்ணயம் செய்துகொள்ளலாம்.
பொது வைபவங்களானாலென்ன பிரத்தியேகக் குடும்ப நிகழ்வுகளானாலென்ன நீங்கள் அறியத்தந்தால் அவை இணையத்தில் குறிக்கப்படும். அது மட்டுமல்ல நிகழ்வுகள் நடைபெறும் இடங்களை இலகுவாகச் சென்றடையயும் பொருட்டு முகவரியுடன் கூடிய பாதை வரைபடத்தையும் இணையம் தரும்.
இச் சேவைக்கான இணையத்தின் கட்டணம் என்ன? இலவசம் என்ற ஒரே கட்டணம்தான்!